சித்திர சபையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை


சித்திர சபையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் சித்திர சபையில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

தென்காசி

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் சிவபெருமான் நடனமாடியதாக கூறப்படும் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நேற்று நடைபெற்றது. மங்கள இசை ஒலிக்க, சிறப்பு பூஜைகள், அபிஷேகத்தை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story