டேன்டீ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
டேன்டீ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், குன்னூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்டங்களில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி 7-வது நிதிக்குழு மூலம் ஊதிய உயர்வுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக சட்டசபையில் அறிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அது தொடர்பான அரசாணை அமல்படுத்தப்படவில்லை. இதை கண்டித்து டேன்டீ ஊழியர்கள் கருப்பு கேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லியாளம் டேன்டீ அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதேபோன்று அனைத்து டேன்டீ அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வருகிற 14-ந் தேதி குன்னூரில் உள்ள டேன்டீ தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்து உள்ளனர்