தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

தாந்தோணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கரூர்

தாந்தோணி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் டெண்டர் குறித்த எந்த தகவலும் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும், டெண்டர் குறித்து தெரிவிப்பதில்லை எனவும் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story