தர்கா சந்தனக்கூடு விழா
சீர்காழி அருகே தர்கா சந்தனக்கூடு விழா நடந்தது
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்கா கந்தூரி விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி நடைபெற்றது. இதில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் மவுலானாவின் கலிபாக்கல், சீடர்கள் கலந்து கொண்டனர். மேலும். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டது குறிப்பித்தக்கது.
Related Tags :
Next Story