காதல் கணவர் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் தர்ணா


காதல் கணவர் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் தர்ணா
x

வலங்கைமான் அருேக காதல் கணவர் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தினர்.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருேக காதல் கணவர் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்தினர்.

காதல் திருமணம்

வலங்கைமானை அடுத்த முனியூர் ஊராட்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த தனபால் மகள் சுகன்யா (வயது25). பட்டதாரியான இவருக்கும், பூந்தோட்டம் மேல தெருவை சேர்ந்த குமார் மகன் மாதவன் (29) என்பவருக்கும் இடையே கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. சுகன்யா தனது கணவர் மாதவனுடன் வசித்து வந்தார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மாதவனின் குடும்பத்தினர் சுகன்யா வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சுகன்யா கடந்த 3 நாட்களாக கணவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பெண் தர்ணா போராட்டம்

சுகன்யாவிற்கு ஆதரவாக கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர் கூறுகையில், என்னை தரக்குறைவாக திட்டி கணவரின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகன்யா தெரிவித்தார்.


Next Story