ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் தரிசனம்
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் தரிசனம்
ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியை சேர்ந்த பழம்பெரும் நடிகை வியாசாமிவசுகி. இவர் தமிழ் மொழியை கற்று தமிழகத்தில் வாழ்ந்து வந்த சித்தர்களின் பெருமையை அறிந்து அவர்கள் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாக தனது பெயரை ஷன்மாதாஜி என மாற்றினார். இதையடுத்து ஆன்மிக சுற்றுப்பயணமாக இலங்கை கண்டி கதிர்காமமுருகன், தமிழகத்தில் உள்ள முருக கோவில்கள் மற்றும் சிவத்தலங்களில் தரிசனம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று ஜப்பானை சேர்ந்த ஷன்மாதாஜி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்ேபாது முருகா என்ற பெயர் கொண்ட அரிசியை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழ் மற்றும் ஜப்பான் இரண்டு மொழிகளும் முற்றிலும் ஒன்றானது. தமிழில் நாமம் என்பதை ஜப்பானில் நமாயே என்று அழைப்பார்கள். தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து அவருக்கு முருகா எனும் பெயர் கொண்ட அரிசியை வழங்க உள்ளோம்.
ஜப்பானில் 5 சிவத்தலங்களும், ஆறு அறுபடை வீடுகளும் நிர்மானிக்க உள்ளோம். தொடர்ந்து திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று வழிபட்டு, தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அறிந்து கொள்ளும் வகையில் தங்களது பயணத்தை தொடர உள்ளோம் என்றனர்.