டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு
x

டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு நடந்துள்ளது.

கரூர்

கரூர் சேலம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள திருக்காம்புலியூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கடையின் ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் நேற்று மதியம் 12 மணிக்கு வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்றனர். அப்போது பின்பக்க சுவற்றில் சிறிய துளை ஒன்றை மர்மநபர்கள் போட்டு உள்ளே நுழைந்து சில மதுபான வகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, டாஸ்மாக்கடையில் மது வகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story