மொபட்டில் சென்ற மருமகள் சாவு; மாமியார் படுகாயம்
பின்னால் வந்த வாகனம் மோதி மொபட்டில் சென்ற மருமகள் இறந்தார். மாமியார் படுகாயம் அடைந்தார்.
பேரையூர்,
மதுரையை சேர்ந்தவர் பாண்டி. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). டி.குன்னத்தூர் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரை பார்ப்பதற்காக சண்முகப்பிரியா மதுரையில் இருந்து மொபட்டில் வந்தார். பின்னர் மீண்டும் மொபட்டில் தனது மாமியார் செல்லமாளுடன் மதுரைக்கு, டி.குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று ெமாபட் மீது மோதியது.இதில் கீழே விழுந்த 2 பேரும் படுகாயம் அடைந்தார்கள்.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா இறந்துவிட்டார். மாமியார் செல்லம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.