பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின  விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி பங்களாமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனி

தேனி பங்களாமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலம் பழைய பஸ் நிலையம், நேரு சிலை, பெரியகுளம் சாலை வழியாக பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள், கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரூபன்சங்கர் ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளாதேவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story