போச்சம்பள்ளி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
கிருஷ்ணகிரி
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள சின்ன பாளேதோட்டத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். திருப்பதி நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் போச்சம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் எர்ரம்பட்டி அருகே முன்னால் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் திருப்பதி பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story