பாகலூர் அருகே அரசு பள்ளி மாணவி திடீர் சாவு
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள பெலத்தூர் கிராமம் ஜீவா நகரை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மகள் ரக்சிதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மதியம் பள்ளியில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட ஆசிரியர்கள், சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி ரக்சிதா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து அவரது தாய் உஷா கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story