கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள கொன்றம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அவர் சின்னசாமிக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பைநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிணற்றில் விழுந்து பலியான மூதாட்டி பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story