அரூர் அருகே கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
தர்மபுரி
அரூர்:
அரூர் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் நண்பர்கள் சிலருடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீருக்குள் சென்று மண் எடுத்து வருவதாக கூறி மூழ்கினார். ஆனால் அவர் மேல் பகுதிக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கிணற்று நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். அப்போது சுரேஷ் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story