தர்மபுரியில் ரெயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற போலீஸ்காரர் பலி
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி பாரதிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காரைக்கால் பயணிகள் ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்தார். அவர் யார்? என்பது குறித்த விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெயிலில் அடிபட்டு பலியானவர் தர்மபுரியை சேர்ந்த எல்லப்பன் (வயது 52) என தெரிய வந்தது. போலீஸ்காரராக பணிபுரிந்த இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் ரெயில் மோதி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story