அரக்கன்கோட்டை வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு- மற்றொரு மூதாட்டியும் பிணமாக மீட்கப்பட்டார்


அரக்கன்கோட்டை வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு- மற்றொரு மூதாட்டியும் பிணமாக மீட்கப்பட்டார்
x

அரக்கன்கோட்டை வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டது. மற்றொரு மூதாட்டியும் பிணமாக மீட்கப்பட்டார்.

ஈரோடு

டி.என்.பாளையம்

அரக்கன்கோட்டை வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்கப்பட்டது. மற்றொரு மூதாட்டியும் பிணமாக மீட்கப்பட்டார்.

தண்ணீர் அடித்து சென்றது

கோவை மாவட்டம் போத்தனூர் அருகேயுள்ள காந்திநகர் மேட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிரேம்குமார் (வயது 40). தொழிலாளி.

தனது குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மதியம் பெரிய கொடிவேரி பகுதியில் செல்லும் அரக்கன் கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார்.

அப்போது எதிர்பாராத வகையில் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். உறவினர்கள் பதறி அடித்து தேடி பார்த்தும் லாரன்ஸ் பிரேம்குமார் கிடைக்கவில்லை.

உடல் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். பின்னர் அரக்கன்கோட்டை வாய்க்காலில் இறங்கி மீனவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தார்கள். நேற்று முன்தினம் மாலை வரை லாரன்ஸ் பிரேம்குமார் கிடைக்கவில்லை. என்ன ஆனார்? என்றும் தெரியவில்லை.

இந்தநிலையில் நேற்று காைல அரக்கன்கோட்டை வாய்க்காலில் லாரன்ஸ் பிரேம்குமார் உடல் மிதந்தது. உடனே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூதாட்டி உடல்

இந்தநிலையில் பெரியகொடிவேரி அரக்கன் கோட்டை வாய்க்காலில் நேற்று காலை பெண் உடல் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்து, பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றார்கள். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் விசாரணை நடத்தினார்கள். அதில் பிணமாக மீட்கப்பட்டவர் சத்தி சதுமுகை நடுப்பாளையம் ரோட்டை சேர்ந்த சீதாலட்சுமி (60) என்பது தெரியவந்தது. உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த சீதாலட்சுமி கடந்த 6-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் ெபரிய கொடிவேரி வந்து அரக்கன் கோட்டை வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்கொலை செய்துகொண்ட சீதாலட்சுமிக்கு பாலமுருகன், சுரேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.


Related Tags :
Next Story