தீயில் கருகி பெண் சாவு
அரூர்:
அரூர் அருகே உள்ள அச்சல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகள் ஐஸ்வர்யா (வயது 23). இவர் போதம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுப்பில் இருந்த தீ எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யாவின் உடையில் பற்றியது. இதனால் அவர் தீயில் கருகினார். அவர் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire