தர்மபுரி அருகே ரெயிலில் அடிபட்டு ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் சாவு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அரிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் தர்மபுரி வெண்ணாம்பட்டியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியரான செல்வகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் அடிபட்டு பலியான செல்வகுமாருக்கு பாமா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர்.
Next Story