உத்தனப்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி மாணவன் பலி
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன்இறந்தான்.
மாணவன்
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மஞ்சுநாத், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் குர்த்திக் (வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை உத்தனப்பள்ளி அருகே டி.குருபரப்பள்ளிக்கு உறவினர் வீட்டிற்கு மாணவன் குர்த்திக் வந்தான். பின்னர் அவன் அருகில் உள்ள நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றான்.
பலி
மாணவன் குர்த்திக் குட்டையில் இறங்கி குளித்த போது, எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.