ஓசூரில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு


ஓசூரில் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஓசூர் நேதாஜி ரோட்டில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி, இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார். தொடர்ந்து, உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இதில் கட்சி நிர்வாகிகள் சண்முகசுந்தரம், சிவப்ப ரெட்டி, தியாகராஜன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, சிறுபான்மை பிரிவு நிர்வாகி அசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story