கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி பிணம்


கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி பிணம்
x

அம்மாப்பேட்டை அருகே கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை;

அம்மாப்பேட்டை அருகே கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி பிணம்

அம்மாப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி (வயது55). தொழிலாளியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் பஞ்சமூர்த்தி வீட்டின் கொல்லைப்புறத்திலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது பஞ்சமூர்த்தி அவரது வீட்டின் பக்கத்து வீட்டு கொல்லைப்புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்.

விசாரணை

தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கழவுநீர் ெதாட்டியில் இருந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து பஞ்சமூர்த்தி மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story