ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
தாமிரபரணி ஆற்றில் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ளது. தற்போது வறட்சி காரணமாக ஆற்றில் தண்ணீர் இன்றி மணல்மேடாக காணப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து பிரியும் வடகால், தென்கால் மூலம் செல்லும் தண்ணீர் விவசாயத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. இந்நிலையில் தற்போது வடகாலில் தண்ணீர் வற்றி காணப்படுவதால் மீன்கள் அதிகளவில் செத்து மிதக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீன்கள் செத்து மிதப்பதன் காரணமாக அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story