மணிவிழுந்தான் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்-துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி


மணிவிழுந்தான் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்-துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
x

தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சேலம்

தலைவாசல்:

மணி விழுந்தான் ஏரி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தெற்கு ஏரி உள்ளது. இந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் விட்டு வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக இந்த ஏரியில் மீன் குஞ்சு முதல் பெரிய மீன்கள் வரை செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த ஏரி சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த ஏரி பகுதிக்கு செல்லும் மக்கள் மூக்கை துணியால் மூடிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.

ஆலை கழிவுநீர்

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் ராமசாமி, மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். அப்போது, ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாக கூறியுள்ளார்.

மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த செத்து மிதக்கும் மீன்களை அகற்றவும், ஏரியில் ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story