காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட காதுகேளாத மாற்றுத்திறளானிகள் நல சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடஒதுக்கீடுபடி வேலை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

தொகுப்பு வீடு

வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அனுபவம் மிக்க சைகைமொழி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்ட காது கேளாதோர் நல சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story