கார் மோதி வியாபாரி படுகாயம்


கார் மோதி வியாபாரி படுகாயம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:30 AM IST (Updated: 1 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வியாபாரி படுகாயம்

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சேணன்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 42). வியாபாரி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூருக்கு வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார். திண்டுக்கல்-வேடசந்தூர் சாலையில் அய்யனார் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி முருகன் கீழே விழுந்த நேரத்தில் அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ரோந்து பணிக்காக அப்பகுதிக்கு வந்த போலீசார் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story