கந்திகுப்பம் அருகேவிபத்தில் எலக்ட்ரீசியன் சாவு
கிருஷ்ணகிரி
பர்கூர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்தனப்பள்ளி மத்தன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் திருப்பதி (வயது 27). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் பர்கூர் அருகே உள்ள அச்சமங்கலம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கந்திகுப்பம் அருகே உள்ள கன்னிமேடு பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் திருப்பதி படுகாயம் காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story