தேன்கனிக்கோட்டை அருகேடிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு


தேன்கனிக்கோட்டை அருகேடிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
x
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் காடுமுச்சந்திரம் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று மோட்டார் சைக்கிளில் தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அஞ்செட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது சாலையில் நிறுத்தியிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story