மத்தூர் அருகேமினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தேங்காய் வியாபாரி சாவு
மத்தூர்
மத்தூர் அருகே மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் ேமாதி தேங்காய் வியாபாரி இறந்தார்.
தேங்காய் வியாபாரி
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள மந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் பெரியசாமி (வயது27). தேங்காய் வியாபாரி. இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். ஊத்தங்கரை சாலையில் மத்தூர் அருகே அந்த வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பெரியசாமிக்கு திருமணம் ஆகி நந்தினி (26) என்ற மனைவியும் சந்தோஷ் (8) என்ற மகனும் பாரதி (6), யாஷினி (3) என்ற2 மகள்களும் உள்ளனர். அவர்கள் பெரியசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.