பர்கூர் அருகேமொபட் மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி சாவு
கிருஷ்ணகிரி
பர்கூர்
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனூர் அருகே உள்ள சின்ராம்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 40) செங்கல் அறுக்கும் தொழிலாளி. இவருடைய மகன் தமிழரசன் (15). தந்தை-மகன் 2 பேரும் மொபட்டில் ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். ஒப்பதவாடி கூட்ரோடு அருகே அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தை-மகன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் திருப்பதியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். தமிழரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story