ராயக்கோட்டை அருகே பரிதாபம்டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலிபோலீசார் விசாரணை
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
5 வயது சிறுவன்
சூளகிரி தாலுகா காமன்தொட்டி அருகே ஒட்டர்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் விஜய் (வயது 29). இவருடைய மனைவி கவுதமி. இந்த தம்பதிக்கு 5 வயதில் பிரபாஷ் என்ற மகன் இருந்தான். நெருப்புக்குட்டையில் உள்ள மாமனார் வீட்டிற்கு கவுதமி மனைவி தன்னுடைய மகனை அழைத்து சென்று இருந்தார். நேற்று காலையில் கவுதமியின் சித்தப்பா அண்ணாதுரை, சிறுவன் பிரபாசை டிராக்டரில் அமர வைத்து அந்த பகுதியில் உள்ள நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பிரபாஷ் மீதுடிராக்டரின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது.
ஆஸ்பத்திரியில் சாவு
இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட உறவினர்கள் கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.