ஓசூரில்லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு
ஓசூர்
ஓசூரில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மாருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சீனிவாசாச்சாரி .இவரது மகன் சேர்ந்தவர் ஹரீஷ் (வயது17). இவர், ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று, நண்பரிடம், பஸ் ஸ்டாண்ட் வரை சென்று வருவதாக கூறி அவரது மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். பின்னர், மீண்டும் அவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு திரும்பினார். இரண்டாவது சிப்காட் பகுதியில் சர்வீஸ் சாலையில் வந்தார்.
பரிதாபமாக சாவு
அப்போது, அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியின் பின்பக்கம் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்தவிபத்தில் கீழே விழுந்த மாணவர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று ஹரீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.