அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமலைபேட்டை பகுதியை சேர்ந்தவர் தொம்மராஜ் குமார் (வயது 49). சமையல் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் கோவையில் இருந்து சித்தூருக்கு பஸ்சில் ஏறினார். அப்போது மது போதையில் இருந்த அவர் தவறுதலாக ஓசூரில் இறங்கி விட்டார். பின்னர் ஓசூரிலும் அளவுக்கு அதிகமாக மது குடித்த அவர் கசவுகட்டா மதுக்கடை அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அட்கோ போலீசார் அங்கு சென்று தொம்மராஜ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story