மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானாா.
கிருஷ்ணகிரி
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் பகுதியை சேர்ந்த மாது மனைவி கெவரம்மா (வயது 50). இவர் சொந்த வேலையாக தனது மகள் மகேஸ்வரியின் மொபட்டில் அமர்ந்து கொண்டு போச்சம்பள்ளிக்கு சென்றார். போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கெவரம்மா சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மகேஸ்வரி காயமடைந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story