கார் டயர் வெடித்து பெண் சாவு


கார் டயர் வெடித்து பெண் சாவு
x

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது காரி்ன் டயர் வெடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை,

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது காரி்ன் டயர் வெடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கண் சிகிச்சை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது45) வெளி நாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்தஊருக்கு சமீபத்தில் வந்துள்ளார். நேற்று அவர் தன்னுடைய தாயார் வசந்தா (60) என்பவரின் கண் சிகிச்சைக்கு மதுரை கண் மருத்துவ மனைக்கு காரில் வந்தார்.

காரை கார்த்திகேயன் ஓட்டிவந்தார். காரில் கார்த்திகேயன் மனைவி ரேகா (34), தங்கை கார்த்திகா (34), மகள்கள் அனாமிகா, தர்சினி மற்றும் கார்த்திகாவின் குழந்தைகள் சஷ்மிதா, கிசோர் ஆகியோர் இருந்தனர். அந்த கார் சிவகங்கையை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் அருகே வந்த போது எதிர்பாராவிதமாக காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த மற்றொரு காரில் மோதியது.

5 பேர் படுகாயம்

இந்த விபத்தில் அந்த காரில் பயணம் செய்த கார்த்திகேயன் மனைவி ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த கார்த்திகா மற்றும் 4 குழந்தைகளும் காயம் அடைந்தனர். அவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தகவல் கிடைத்ததும் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் தாயை பறிகொடுத்துவிட்டு படுகாயம் அடைந்து அழுதபடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தை களுக்கு சிவகங்கை நகர் போலீசார் உணவு வாங்கி கொடுத்து சமாதானம் செய்தனர்.இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story