பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியானான்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மகன் சந்துரு (வயது16). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சாய் பிரசாத் மற்றும் புரோஸ் ஆகியோருடன் உத்தரகோசமங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் 3 பேரும் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். ராமநாதபுரம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கி சந்துரு பரிதாபமாக பலியானார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் இடையர்வலசை கனகராஜ் என்பவரை கைது செய்தனர்.