சாலையோரம் இருந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையோரம் இருந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வெங்கடசமுத்திரத்திற்கு சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோளையானூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே விநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் முருகன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.