தர்மபுரியில் கார் மோதி திருநங்கை பலி
தர்மபுரியில் கார் மோதி திருநங்கை பலியானார்.
தர்மபுரி
தர்மபுரி:
சேலம் மாவட்டம் சின்னதிருப்பதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் என்கிற பிந்துமாதவி (வயது 27). திருநங்கையான இவர் தர்மபுரியில் உள்ள சேலம் பைபாஸ் சாலை அருகே திருநங்கைகளுடன் தங்கியிருந்தார். நேற்று இவர் பாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) மற்றும் ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிந்துமாதவி உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 2 பேரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story