தீக்குளித்த பெண் சாவு
தீக்குளித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா சிறுகம்பையூர் அருகே உள்ள ஆரியன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தின கண்ணன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது36). இவர் கடந்த ஒரு வருடமாக மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ெணய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story