புளிய மரத்தில் கார் மோதி முதியவர் பலி
பொம்மிடி அருகே புளிய மரத்தில் கார் மோதி முதியவர் பலியானார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை நேதாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் பாஷா. இவரது மனைவி சுமையா பர்வீன். அஸ்லாம் பாஷாவின் தந்தை சிராஜுதின் (வயது 74). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் காரில் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். பொம்மிடி பையர்நத்தம் அருகே வந்த போது காரின் டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிராஜுதின் படுகாயம் அடைந்தார். அஸ்லாம் பாஷா, சுமையா பர்வீன் லேசான காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் முதியவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.