வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் திடீர் சாவு
வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் இறந்தார்.
வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் திடீர் சாவு
பரமத்திவேலூர்:
வேலக்கவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகள் கவிப்பிரியா (வயது 25). எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக கவிப்பிரியா வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் வயிற்று வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அவர் மாத்திரை சாப்பிட்டும் வயிற்று வலி குணமாகவில்லை. வலியால் துடித்த அவர் தனது தந்தை கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் விரைந்து சென்று, கவிப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிப்பிரியா பரிதாபமாக இறந்தார். வயிற்று வலிக்காக மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் திடீரென உயிரிழந்தது குறித்து வேலக்கவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.