வாகனம் மோதி வாலிபர் சாவு


வாகனம் மோதி வாலிபர் சாவு
x

ராயக்கோட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சின்ன கும்மனூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மூர்த்தி (வயது 21). இவர் நாகமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டையில் இருந்து உத்தனப்பள்ளியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கருக்கனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story