ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலி


ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலி
x

ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு என்பவரின் மகன் மனோகரன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வாலாந்தரவை ஊரணியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக பலியானார். இந்நிலையில் ஊருணியில் அவரின் உடல் மிதப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரின் மகன் முருகன் (31) அளித்த புகாரின் பேரில் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story