தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொட்டாயூரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 53). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 4-ந் தேதி நெடுங்கல் முனியப்பன் கோவில் அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story