மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி சாவு


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி சாவு
x

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இவரது மகன் படுகாயம் அடைந்தார்.

தர்மபுரி

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இவரது மகன் படுகாயம் அடைந்தார்.

விவசாயி

தர்மபுரி செட்டிகரையை சேர்ந்தவர் காந்தன் (வயது 58). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காந்தன் தனது குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். வீட்டிற்கு சென்றபோது வீட்டின் சாவியை அவர்கள் சென்ற தனியார் வாகனத்தில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.

இதனால் காந்தன் தனது மகன் குமரகுரு (18) உடன் சாவியை வாங்க மதிகோன்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சாவியை வாங்கி கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தந்தை-மகன் 2 பேரும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். ராஜாபேட்டை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட காந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் குமரகுரு படுகாயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story