மின்சாரம் தாக்கி 13 ஆடுகள் சாவு
மின்சாரம் தாக்கி 13 ஆடுகள் இறந்தன.
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாசிநகரை சேர்ந்தவர் கனிமுத்து. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கூடவே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை வளர்த்து வந்த கனிமுத்து தோட்டத்தில் உள்ள வீட்டின் அருகிலேயே கம்பிவேலி அமைத்து ஆடுகளை இரவு நேரத்தில் பாதுகாத்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு பெய்த சாரல் மழை காரணமாக வீட்டில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த கம்பி வேலியில் பாய்ந்து மின்சாரம் தாக்கியதில் சுமார் 13 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கனிமுத்து போலீ சாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story