நெடுஞ்சாலைத்துறை அலுவலக காவலாளி பலி
திருப்பூர்
காங்கயத்தில் உள்ள தாராபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). இவர் காங்கயம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் காவலாளியாக வேலை செய்துவந்தார். இந்த நிலையில் பரமசிவம் தனது ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் காங்கயம்-திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக பரமசிவம் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பரமசிவத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரமசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story