பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை சாவு


பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை சாவு
x

ஓசூரில் பிறந்த சிறிது நேரத்தில் பெண் குழந்தை இறந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளியை சேர்ந்தவர் அம்ரீஷ் (வயது 32). இவரது மனைவி யசோதா (28). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த யசோதா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. நல்ல உடல் ஆரோக்கியமாக இருந்த அந்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்து விட்டது.

இது குறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலர் சக்திவேல், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் குழந்தை பிறந்த போது ஆரோக்கியமாக இருந்தது. குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளது. விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story