மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி
காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
காரிமங்கலம் அருகே உள்ள குட்டப்பட்டியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23). சாணார்பள்ளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (22). இவர்கள் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பொம்மிடி அருகே பையர்நத்தம் பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சிவக்குமார் இறந்து விட்டது தெரியவந்தது. அரவிந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.