விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

விபத்தில் வாலிபர் பலியானார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே உள்ள காரேந்தல் பகுதியை சேர்ந்த தாயுமானவர் என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது35). இவர் தனது மனைவி ரேவதி (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் வந்துவிட்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மகர்நோன்பு திடல் அருகில் சென்றபோது அந்த வழியாக 3 வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் காயம் அடைந்தனர். ஜெயக்குமார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துபோனார். அவரின் மனைவி ரேவதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் இந்திராநகர் கண்ணன் மகன் உலகநாதன் என்பவரை தேடிவருகின்றனர்.


Next Story