வேன் மோதி சாவு


வேன் மோதி சாவு
x

தொப்பையாறு அணையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற தொழிலாளி வேன் மோதி இறந்தார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள மஞ்சநாயக்கன்தண்டா கிராமத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று மாலை அந்த விநாயகர் சிலையை தொப்பையாறு அணையில் கரைப்பதற்காக அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி ராம்குமார் (வயது23) மற்றும் வாலிபர்கள் சரக்கு வேனில் எடுத்து சென்றனர். இந்திரா நகர் அருகே சென்றபோது வேனில் பக்கவாட்டில் இருந்த ராம்குமார் மீது எதிரே வந்த சரக்கு வேன் உரசியது. இதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. அவரை உடன் சென்றவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story