மின்சாரம் தாக்கி இலங்கை அகதி பலி


மின்சாரம் தாக்கி இலங்கை அகதி பலி
x

மின்சாரம் தாக்கி இலங்கை அகதி பலியானார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கையை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 38). பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்தார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியை பிரிந்து விட்டார். பின்னர் மானாமதுரை முகாமில் அவரது தாய் கலாதேவியுடன் வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராமலிங்கம் மண்டபம் முகாமிற்கு வந்து இவரது தங்கை பரமேசுவரி வீட்டின் அருகில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ராமலிங்கம் மின்சார கம்பியை பிடித்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டை தடுக்க வீட்டின் பின்புறம் இரும்பு கம்பியில் மின்சார இணைப்பு கொடுத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதில் கைப்பட்டு மின்சாரம் தாக்கி அவர் இறந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story